
முத்த யுத்தம்
21
விருந்து
முடிந்து வெத்திலை பாக்கு பீடா என்று கலகலப்புகள். மணி அதாகுது
பதிணொண்ணரை. யார் மணி பத்திக் கவலைப் பட்டார்கள். அல்லது எவனுக்குமே
மணி பார்க்கத் தெரியாது போல.
மனோன்மணியும் அவளின் கீழ்ப்படியாளும்
தவிர மத்தாளுகள் ஜாகையிலேயே தங்கி காலையில் கிளம்புகிறாப்
போலிருந்தது. இங்கே வந்து மனோன்மணி உடை மாற்றியிருந்தாள்.
புடவையில் வேறாளாய்த் தெரிந்தாள்.
குடும்பப் பாங்காய் இருந்தாள். மெல்லிய ஆகாய வர்ண சிபான். ரவிக்கை உள்ளே கருப்பு
உள்ளாடை. வெத்திலை போட்டு உதடுகள் இன்னும் சிவந்து கிடந்தன. சாதாரணமாகவே அது
சிவப்புதான். பொம்பளையாள் வெத்தலை போட்டா எந்த ஆம்பளைக்கும் இருப்பு கொள்ள
மாட்டங்குது. ஏன் அப்டி?
தெர்ல!
நம்ம தலைவரும் சதா பன்னீர்ப் புகையிலை
அதக்குகிறவர்தான். இருந்தாலும் உதடா அது? அரக்குச் சரக்கு. போஸ்டாபீஸ் தபால்பையில் வைத்து புளி நச்-ச்-சாப்ல
வருமே.... கருப்பும் சிவப்புமான அரக்கு சீல். அந்த அழுக்குச் சிவப்பு.
பாண்டித்துரை சும்மா குழைஞ்சி நெளியாரு
அவளைப் பார்த்துப் பார்த்து. வேடிக்கையா இருந்தது.
சாதாரணமா ஆண்நாய் கெடந்து தவ்வுற
தவ்வுக்கு பெட்டை நாய்தான் நெளியும். இது மனுச ஜாதில்லா.. எல்லாமே உல்ட்டா!
மத்த எந்த மிருகத்துலயும் பார்த்தா. ஆண்
யானைக்குதான் பொதுவா தந்தம் இருக்கும். சில ஆப்ரிக்க யானை வகைல பெண்யானைக்கும்
உண்டுன்றாங்க. அதைவிடு. ஆண் மான் தான் கொம்பு சிறந்தது. ஆண் மயிலுக்கு தான் தோகை.
அழகு சமாச்சாரத்தில் மத்த மிருகங்களில் ஆண்தான் உசத்தி. மனுசாளில் மாத்திரம்
மாத்தி அமைஞ்சிட்டது.
ஐயம் பெருமாள் பிறவி அறிவாளி. அவனால்
இப்படி பெத்தம் பெரிய சிந்தனைகள்... ஆராய்ச்சிகள் செய்யாமல் இருக்க முடியல.
கொட்டாவி வந்தது. மத்தாளுகளுக்கும்
அலுப்புதான். இவனுக்கென்ன அலுப்பு -
வண்டில சாயல்குடி போயி பறந்து வந்திருக்காப்டி. மத்தாளுகளுக்குத் தின்ன அலுப்பு -
அவனவன் இடுப்பு பெல்ட்டை அவிழ்த்து விட்டாச்சி. அந்தாக்ல உருள வேண்டிதான்.
காலைல நாலு நாலரைக்கெல்லாம் ஜாகைல
தீபாவளித் திருநாள்தான். அங்கங்க வயிறு தொறந்து பட்டார் பட்டார்னு வேட்டுச் சத்தம்
ஆரம்பிச்சிரும்.
அவன் போன ஜோருக்கு மனோன்மணி எழுந்து
கொள்கிறாள். மோதிரம் பொலியும் சொம்பஞ்சுக் குழம்பு - அதென்ன செம்பஞ்சுக் குழம்பு? தெர்ல!
காவியங்களில் வாசிச்சிருக்கான். பொம்பளையாள் சமாச்சாரம்ல.... அது ஒரு சாப்பிடற
வஸ்துனு ரொம்பநாள் தினைச்சிருந்தான்! விரல்கள் குவித்து தாமரை மொட்டாய் வணக்கத்தை
வழங்கினாள் ஒரு சிரிப்புடன்.
சிரிப்பா அது? நள்ளிரவு
சூர்யன். பாண்டித்துரைக்கு அவளைப் பிரியவே மனசு வர்ல. அழுதுறாதய்யா. பரவால்லன்னு
அவர் அழுதாலும் ஆச்சரியம் இல்லை.
அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்?
அழாத பிள்ளை விரல் சூப்பும்.
அவன் பார்த்தவரை ஆண் குழந்தைகள் அதிகம் அழுகின்றன.
பொம்பளைப் பிள்ளைகள் விரல் சூப்பிக் கொள்கின்றன . ஏன்?
தெர்ல.
தொட்டில் பழக்கம் சுடுகாடு
மட்டும்னு பழமொழியப்போல்!
"உங்ககூடப்
பேசிட்டிருந்ததுல நேரம் போனதே தெரில...." என்கிறார் அண்ணாச்சி.
"நல்ல விருந்து.
ரொம்ப நன்றி. வரட்டுமா?"
இப்ப பாண்டித்துரை மனசுல என்ன பாட்டு
ஓடும் சொல்லு பாப்பம்?...
அந்த நீயொரு
முத்தம் தாடா.... அதானே?
தாடா - அல்ல தாடி!
..நீல வண்ணக்
கண்ணே வாடி... நீ ஒரு முத்தம் தாடி...
அந்த மனுசனைப் போட்டு இப்டி வாட்டி
வதைக்கிறாளேய்யா?
ஒரு இந்தக்காலப் புதுக் கவிஞன்
சொன்னாப்ல.
ஆடிக்குப் பின் ஆவணி
என் தாடிக்குப் பின் தாவணி!
இந்தக்காலக் கவிஞர்கள்ல ஜொள்ளர்கள்
அதிகம். விக்கிரமாத்தித்தன் அதுல கொஞ்சம் ஓவரு. திடீர்னு குண்டக்க முண்டக்க
எழுதிப்பிடுவாரு.
பதினாறு வயதில்
முலையுண்டு காம்பில்லை
அறுபது வயதில்
காம்புண்டு முலையில்லை!
இப்டி ஒரு கவிதை! ஏன் அப்டி? எலேய். வழக்கம்
போல இதுக்கும் தெர்லன்னு பதில் சொல்லண்டாம்.
மனுசாளுக்கு எப்பிடில்லாம்
ஆராய்ச்சி ஓடுது பார்த்தீராவேய்? ஐயம் பெருமாள் மாத்திரம் இல்லை. நாட்டில் நிறைய ஆராய்ச்சியாளர்கள்
இருக்கிறார்கள்.
- காரில்
பின்சீட்டில் மனோன்மணியும் கீழ்ப்படியாளும் அமர்கிறார்கள். பவ்யமாகக் கதவைத்
திறந்து விட்டார் பாண்டித்துரை.
சொந்த சம்சாரத்தைப் பிரியும் போதுகூட
மனுசன் இத்தனை துக்கப் பட்டிருப்பாரா சந்தேகத்தான்.
இப்ப இத்தனை துயரப்
படறாரே. 'அப்ப' அத்தனை
சந்தோசப் படலாம் ஒருவேளை! .. பாகீஸ்வரி.. யானைக்குட்டி அந்தப் பய... பூபதி. யானைக்குட்டிக்குப்
பிறந்த பன்னிக்குட்டி.
டாய்! இவர் பெரிய மன்மதக்குஞ்சு. ஊர்ல
இருக்கறாளுகளை யெல்லாம் கேலி பண்ணியாறது.
கார் எடுத்த எடுப்பில் உற்சாகத்துக்குக்
குறைவில்லை. மனோன்மணியிடம் தன் தமிழ் அறிவைக் காட்டிக் கொள்ள வேணுமாய் ஒரு இது.
வாய்க்குமா என்றிருந்தது.
எங்க? அத்தனை
உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தவள் கார் கிளம்பிய ஜோரில் அப்படியே கண்ணாயர்ந்து விட்டாள்.
கீழ்ப்படியாளின் தோள்ப்படிந்து விட்டாள்.
நல்ல அலுப்பு இருக்கும் பாவம், என நினைத்துக்
கொண்டான். அவளால் காட்டிக்கொள்ள முடியாது. சதா சிரித்த முகமாய் முகமூடி தேவை சில
ஆட்களுக்கு. நாட்டிய அம்மணிகளுக்கு,
நர்சுக்கு, பிரசவம் பாக்கற
டாக்டருக்கு... டாக்டர் தூக்கக் கலக்கமா இருந்தா வம்பாயிரும். நர்சுக்கு ஆபரேசன்
பண்ணிப்பிடுவாரு.
பாவி. தூக்கத்தில் கூட அழகாய்
இருந்தாள். சில ஆட்கள் முழிச்சிட்டுருக்குறப்ப சுதாரிப்பா இருக்கும். தனை மறந்து
தூங்கறப்ப அத்தனை ஆபாசமா இருக்கும். வாயைப் பொளந்து தூங்கும். சாளவாய் வழியும்...
கஷ்டப்பட்டு புகையிலைபோல் உள்ளதக்கியிருந்த பல்லு மேஜைக் கைப்பிடி மாதிரி வெளிய
வந்துரும்..
மெல்ல தோளில் இருந்து சரிந்து இறங்கி
கீழ்ப்படியாள் மடிக்கு மாறி யிருந்தாள். ராகம் உறங்கும் வீணை.
இனி எங்க இவர்களைப் பார்க்க. அடுத்து
எப்போ வாய்ப்பு வரும், என்றிருந்தது.
டிரைவர் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
அசோக வனத்து ராட்சசிகள் ஆஞ்சனேய
வசியத்தில் அகப்பட்டாப்போல - ராத்திரி ட்ரிப்ல ரொம்பக் கொடுமை - கத்தி எல்லாவனும்
தூங்கிருவான். இவனுக்கும் தூக்கம் அந்தாக்ல உள்ள உள்ள சர்ர் சர்ர்னு மூக்குச்சளியா
இழுக்கும்.
தூங்க முடியுமா அவன்?
அட வர்றது வரட்டும்னு சில சமயம் கண்ணு
அந்தாக்ல அதுபாட்டு மூடிரும். ஆக்சிடென்ட்! வேறென்ன?
எலேய். பாத்து ஒட்டப்போவ். இதுவரை நீ
எத்தனையோ பேர் காலை ஒடிச்சிருக்க.. ஒத்துக்கறோம். இந்தம்மா பாவம். அவுக விசேசமே
கால்தான்.
காலி பண்ணீறாத!
மனசை உற்சாகப் படுத்திக் கொள்ள
முயன்றான்.
ஒரு ஜோக் "ஒரே காலுள்ள கொக்கு
ஒண்ணை நான் பாத்தேன்யா" என்கிறான் அவன்.
அதுக்கு "நம்பவே முடியல. அப்டி
ஒருக்காலும் இருக்காது"ன்றான் இன்னொருத்தான்.
இன்னொரு ஜோக்.
நர்ஸ் - "இன்னியோட நீங்க
டிஸ்சார்ஜ் ஆகிப் போறீங்க உடம்ப நல்லாப் பாத்துக்கங்க."
நோயாளி பதில். "சரிம்மா
காட்டு!"
ஒரு படத்துல எம்ஜியார் பாடுவாரு... நானே
எழுதி நானே நடிக்கும் நாடகத்தில் நல்ல திருப்பம்... அதும் மாதிரி.. டிரைவர்
வாழ்க்கை ஊரே உலகமே கத்தியும் தூங்கிட்டிருக்கும் நைட். அவன் மாத்திரம் தூங்காமக்
கொள்ளாமல்... அதும் பத்திரமா பார்ட்டிய வீட்ல
கொண்டாந்து சேக்கனும்... அதைத் தவிர்க்க முடியாது. அதும் பாதி நைட்- பயணம்
என அமைஞ்சிருது. மனுசனும் ஆம்பிள்ளப் பிறவி. மோப்பநாய் வர்க்கம்.... எங்க
தொட்டாலும் சிந்தனை பொம்பளையாள் பத்திதான் வந்து நிக்கும்.
அதிலும் பொண்டாட்டி வாசனை
கிட்டாத வெளியூர் டிரைவர்னா இன்னும் சாஸ்தி அவஸ்தை.
ஐயோ டாக்சி டிரைவர்ங்க பாடு இன்னும்
கஷ்ட்ம்டா. வாற பார்ட்டிங்க ஒவ்வொரு விதம். ஏர்ற ஆளுங்க புருசன் பொண்டாட்டியான்னு
ஜடென்டிடி கார்டா கேக்க முடியும்?
ஆனா உரசற
உரசல்லியே தெரியும்னு வெய்யி.
புதுக் கல்யாணம்னா தவிர... புருசன்...
பொண்டாட்டி வந்தாங்கன்னா ரெண்டு பேர் மூஞ்சிலயும் ஒரு உர்ர் இருக்கும். என்
வாழ்க்கையின் மொத எதிரி நீதான்றாப்ல.
அதை விடு. காதல் ஜோடியோ, புதுக்
கல்யாணப் பார்ட்டியோ ஏறினா பின் சீட்டில் ஒரே அமக்களம். கார் அம்பாசாடர் கார்.
அத்தனை இடங் கெடக்கு. ஏன் இப்டி நெருக்கியடிச்சி தொட்டித் தவளையாட்டம்
உக்கார்றாங்களோ? தெரு வெளிச்சம்
சட்டுனு அடங்கி கொஞ்சம் இருட்டு வந்திறப்படாது. என்னென்னவோ சத்தம் கேட்கும்
பின்னாலயிருந்து. வெளிச்சம் வந்தா சத்தம் அடங்கிரும்.
சட்னு திரும்பிப்
பார்க்க ஆவேசம் வரும். பார்த்தால்? ஆக்சிடென்ட்டாயிரும்னு கட்டுப்படுத்திக்க வேண்டி
வரும்.
இவாளுக்கு அவாள் ஊட்டி விடறது. ஏன்டா
உனக்குத் தன்னால் திங்கத் தெரியாதா?
எருமை மாதிரி
வளந்திருக்கியே-ன்னிருக்கும். ஏன் அப்டித் தோணுது? எல்லாம் ஒரு
வயித்தெரிச்சல் தான்.
கார் அதுபாட்டுக்கு ஓடியது. மனசு அதும்
பாட்டுக்கு ஒரு எடுப்பு எடுக்குது. குளிரெடுத்த இரவு, மழையறிகுறிகள்
வலுப்பெற்றிருந்தன... ரயில் வரப்போகிற ரெண்டாம் அறிவிப்பு. மழை இன்னும் சற்று
நேரத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும்.
சிறுகுளம் வந்து விட்டது. அவன் கனவு
கண்ட காத்திருந்த.. மனோன்மணியுடனான பயணம்... தனிமை இரவு... எல்லாமே வாய்த்து...
ஆனால் உரையாடல் இன்றி. ஆனால் இழப்பாய் இல்லை.
ஆ இவனை பத்திரமாயக் கொண்டு
சேர்த்தேன்... என ஒரு திருப்தி.
பி.பி.பி. பேரைப் பார்.... நாதகரத்தை
ஊதிப் பாக்கிறாப் போல... உம்ம மனோன்மணியை பத்திரமா கரை சேத்துட்டேன்.
இருட்டிலேயே வீட்டின் எடுப்பு
தெரிந்தது. முதலில் அந்த கீழ்ப்படியாள் இறங்கிப் போய்க் கதவைத் திறக்கிறாள். சற்று
திறக்க திகைக்கிறாள். அவள்... அவன் போய்த் திறக்க உதவும்போது அவளுடன் உரசிக்
கொள்கிறான். விகல்பமில்லாமல் சற்று அவள் ஒதுங்கிக் கொள்கிறாள் பிறகு.
உள்ளே போய்ப் பார்க்க ஆசைதான்.
மறுநாளின் சிறு துவக்கம் மனசின் வக்கிரங்களை கவனமாக உதறிக் கொள்ள முடிவு செய்தான்.
கூடைகளை உதவியாள் எடுத்துச் சென்று
உள்ளறைகளை வெளிச்சப் படுத்தினாள். அதுவரை மனோன்மணி காத்திருந்தாள் காருக்குள்ளே.
உள்விளக்கு போட்டிருந்தான் அவன். அலுப்பான அவள். துக்கக் கலக்கமான அவள். எவ்வளவு
மென்மையாய் இருக்கிறாள். கிட்டத்தில் ஆசைதீரப் பார்த்தான்.
ஒரங்கள் வரை நீளப் பரந்த விழிகள்.
மைதீட்டிய ஜோர் தனிக்களை தந்தது. அந்தக் கண்களை மென்மையாய்ப் பிரியமாய் முத்தமிட
விரும்பினான்.
இப்படி இன்னொரு தடவை வாய்க்குமா என்ன? அப்படியே
கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தாள். அதுவே ஒரு அபிநயம் போலிருந்தது. சோம்பல்
முறிக்கும் ஆம்பல். அவன் பார்ப்பதைப் பார்த்து சட்டென தனக்குள் அந்தப் பார்வையை
உள்வாங்கிக் கொண்டு.... ஆனால் புன்னகைத்தாள்.
"மறக்க முடியாத
நிகழ்ச்சி..." என்றான் ஐயம். எதுடா அவ சோம்பல் முறிச்சதா?
"மகிழ்ச்சி"
என்றாள்.
"உங்களைவிட
உங்கள் தமிழை வணங்குகிறேன்..."
"நியாயமே"
என்று தலையை ஒதுக்கிக் கொண்டு புன்னகைத்தாள். "நான் தனியாக ஒரு தமிழாசிரியரிடம் பயிற்சி
பெற்றவள்..."
"எனில் அவரையும்
வணங்குவேன்..." என்றான் அலங்காரமாய். "ரொம்ப நேரம் ஆயிட்டது. நிறையப்
பேச ஆசை. இப்ப முடியாது" என்றான் புன்னகையுடன் "மழை வேற வருது..."
"தங்கீட்டு
காலைல போறீங்களா?"
என்றாள் மனோன்மணி.
•
வெள்ளிதோறும்
தொடர்கிறேன்
91
9789987842 / 91 9445016842
No comments:
Post a Comment